லைசன்ஸ் ரத்து குறித்து பரிசீலனை செய்யப்படும்: விஜயபாஸ்கர்!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 02:18 pm
the-advice-of-the-court-to-cancel-the-license-is-review

ஹெல்மெட் அணியாமல் சென்றால் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் அறிவுரை குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் பள்ளியின் வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்த பின் தான் இயக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

தமிழகத்தில் 32,576 பள்ளி வாகனங்கள் உள்ளது. அதில் 31,143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 1009 வாகனங்களில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்ட பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பயண அட்டை வழங்கப்பட உள்ளது என்றும், புதிய பயண அட்டையை முதலமைச்சர் விரைவில் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் சீருடையில் இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்த அவர், தனியார் பள்ளி வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதலில் 500 பேருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.  விரைவில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்திய ஆட்டோ மீட்டர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

ஹெல்மெட் கட்டாயம் என்கிற சட்டத்தை தீவிரமாக பின்பற்றி வருவதாகவும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கனின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்ற அறிவுரை குறித்து பரிசீலனை செய்வோம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close