கிரேஸி மோகன் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன், தினகரன் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 04:44 pm
crazy-mohan-death-pon-radhakrishnan-dinakaran-mourning

பிரபல  நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

‘தன்னுடைய  நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன். அவரின் பிரிவை தாங்கும் வலிமையை குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்களுக்கு வழங்கிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும்  கிரேஸி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்தியில், ‘ நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். லட்சோபலட்சம் பேரை நகைச்சுவையால் மனம்விட்டு சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close