தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மற்றும் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in