கிரேஸி மோகன் மறைவு : ஸ்டாலின் வேதனை

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 07:32 pm
crazy-mohan-s-death-is-painful-mk-stalin

கிரேஸி மோகன் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திரையுலக கதை - வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களை இயக்கி நடித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிப்படையில் பொறியாளரான அவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை - வசன கர்த்தாவாக விளங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close