கிரேஸி மோகன் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:06 pm
crazy-mohan-death-chief-minister-deputy-chief-minister-mourning

பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் இரங்கல் செய்தியில், ’கிரேஸி மோகன் மறைவு தமிழ் நாடகத் துறைக்கும், திரைப்படத் துறைக்கும் பேரிழப்பாகும். கிரேஸி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத் துறை, திரைத் துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேஸி மோகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’கிரேஸி மோகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close