பழனி முருகன் கோயில் : ரோப் கார் சேவை நிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:26 pm
palani-murugan-temple-rope-car-service-stop

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இம்மாதத்திற்கான பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் சேவை ஜூன் 12 -ஆம் தேதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் படிகள் அல்லது மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோயிலுக்கு செல்லுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close