சென்னை: வெடிகுண்டு வைத்தவரை சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்று பிடித்த போலீசார்!

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 02:33 pm
young-engineer-arrested-for-bomb-blast-intimidation-in-chennai

சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள மஹிந்திரா தொழில் வளாகத்தில்  தனியார் மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கார்த்திகேயன் என்னும் 29 வயதான இளைஞ‌ர் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது அவசர தேவைக்காக‌ 50 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் பணியாற்றி வரும் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இ-மெயில் அனுப்பி நிதி உதவி செய்யுமாறு கோரியுள்ளார். அதற்கு அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த   மின்சாரம் மற்றும் மின்ணணு பொறியியல் படிப்பு முடித்துள்ள  கார்த்திகேயன், சிறிய ரக வெடிகுண்டு ஒன்றை தயாரித்து அதை மொபைல் போன் மூலம் வெடிக்கச் செய்ய தேவப்படும் ஆப் ஒன்றையும் தரவிரக்கம் செய்துள்ளார். 

இவை இரண்டையும் இணைத்து  வெடிகுண்டை ஒரு பந்தில் மறைத்து, தான் பணிபுரியும் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்துள்ளார். பின்னர் அலுவலக அதிகாரிகளை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திகேயன் 50 லட்சம் பணம் தரவில்லையெனில் வெடிகுண்டை வெடிக்க வைத்துவிடுவேன் என மிரட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து பதறிப்போன மென்பொருள் அலுவல ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வெடிகுண்டை செயலிழக்க செய்து விட்டனர்.

பின்னர் கார்த்திகேயனின் இருப்பிடம் தெரியாத காரணத்தால் போலீசார், அலுவலகத்துக்கு அவர் வந்தடைந்த நேரத்தைக் கணக்கிட்டு அங்கிருந்த சிசிடிவி கேமார மூலம்  அவர் அலுவலகத்தை விட்டுச் செல்லும் பாதையை கணித்தனர். இவ்வாறு அவர் வந்த பாதையில் சாலையெங்கும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள  சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரவாரியாக அவர் செல்லும் பாதையை கணக்கிட்டு, கேமராக்களின் உதவியோடு கார்த்திகேயனின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

போலீசார் தன்னுடைய வீட்டை சுற்றி வளைத்ததை அறிந்த கார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சிக்கத் தொடங்கினார். அதற்குள் அவரின் வீட்டிற்குள் புகுந்த போலீசார். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மாநகர தலைமை காவல் அதிகாரியாக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டதிலிருந்து குற்றக்கண்காணிப்பில் சிசிடிவி கேமராக்களின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி, தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சாலையெங்கும் சிசிடிவி கேமராக்களை அமைக்கச் செய்தார்.

அதன் காரணமாக பல்வேறு குற்றச்சம்பவங்களின் புலனாய்வுப் பணிகளில் இத்தகைய சிசிடிவி கேமாராக்கள் பெரும் உதவியாற்றி வருகின்றன என்றால் மிகையல்ல. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close