முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நெல் ஜெயராமன் குடும்பத்தினர்!

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 02:13 pm
nel-jayaraman-family-thanked-to-the-chief-minister

நெல் ஜெயராமன் கண்டுபிடிப்புகளான அரியவகை நெல் உற்பத்தி குறித்து 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வருங்கால சந்ததிக்கு பயன்படும் வகையில், சுமார் 169 வகையான மூலிகை குணங்கள் நிறைந்த நெல் வகைகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். அவரது சிறந்த தொண்டினை போற்றும் வகையில், இந்த கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் நெல் ஜெயராமனின் நெல் உற்பத்தி முறை குறித்து பாடமாக வெளியிட்டு சிறப்பித்தது தமிழக அரசு.

இந்நிலையில், பாடபுத்தகத்தில் நெல்ஜெயராமன் குறித்து பாடமாக வெளியிட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல் ஜெயராமனின் சகோதரர் ஞானசேகரன், நெல் ஜெயராமன் பெருமையை வருங்கால சந்ததிகள் அறியும் பொருட்டு, எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமலேயே, அவரது சாதனைகளை 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், நெல் ஜெயராமனின் கண்டுபிடிப்புகளை பாடமாக வெளியிட்டதன் மூலம் வருங்கால சந்ததியினர் மிகுந்த பயனடைவார்கள் எனவும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close