புதுச்சேரி: நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அட்மிட்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 05:54 pm
admit-a-person-with-a-symptom-of-nipah-virus

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த  நபருக்கு நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபரை மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த நபர் ஜிப்மர் மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு ரத்த பரிசோதனை மாதிரி ஆய்வுக்கு  எடுக்கப்பட்டது. அந்த நபர்  நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பதை நாளை தான் உறுதிப்படுத்த முடியும் என்று ஜிம்பர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close