மத்திய அமைச்சருடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 09:23 pm
minister-sp-velumani-meet-union-minister-narendra-singh-tomar

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை, தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் இன்று சந்தித்தார்.

அப்போது மத்தியமைச்சரிடம் அவர் அளித்த மனுவில், "தமிழக உள்ளாட்சிக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியம் ரூ.876 கோடி வழங்கவும், 2017-18-ஆம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ.194.78 கோடி வழங்கவும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி கோரியும், அனைவருக்கும் வீடு திட்டத்தில் விடுபட்ட 8 லட்சம் பேரை இணைக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சிவில் விமான போக்குவரத் துறை அமைச்சர் ஹர்திப் பூரியை  நேரில் சந்தித்து, கோவையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்ட்ட  627.89 ஏக்கர் நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் எனக் கோரியும் அமைச்சர் மனு அளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close