முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 10:34 am
poster-in-support-of-chief-minister-palanisamy

சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அருகே முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு நிலவியது. 

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை குறித்த பிரச்னை தலை தூக்கிய நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது. மேலும், கட்சியின் கருத்துக்கள் குறித்து வெளியே தெரிவிக்க கூடாது என தெரிவித்து ஆணை பிறப்பித்தது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் அருகே, முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சுவரொட்டியில்,  அதிமுகவின் புதிய கழக பொதுச்செயலாளராக பதிவியேற்க வாருங்கள்.. மாண்புமிகு எடப்பாடியாரே.. என எழுதப்பட்டிருந்தது. 

இந்த போஸ்டரை கொளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற அதிமு நிர்வாகி ஒட்டியுள்ளார். இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு அழைப்பு கடிதத்துடன் வர வேண்டும என அதிமுக தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close