அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது! ஒற்றைத் தலைமை உருவாகுமா?

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 11:00 am
admk-meeting-held-in-chennai

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆகியோரது தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிய ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஒரு சில நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய மூன்று எம்.எல்.ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் பங்கேற்கவில்லை. மேலும், உடல்நலக்குறைவு காரணமாக பெரம்பலூர் மாவட்ட செயலரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ராமலிங்கம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close