ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பழனிச்சாமி!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 05:24 pm
cm-edappadi-palanisamy-meets-tn-governor

இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசி வருகிறார். 

தமிழகத்தில் இம்மாத இறுதியில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் புதிய டிஜிபி நியமனம் குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது. சென்னையில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. 

முன்னதாக நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close