தமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா? 

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 08:30 pm
nia-officials-investigates-to-tn-youths-about-their-link-with-is-group

கோவையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், லேப்டாப்புகள், செல்போன்கள் மற்றும் பல முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கோவையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர், முக்கிய ஆவணங்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், கைதானோரின் சமூக வலைதள பதிவுகளை ஆராய்ந்ததில், அவர்கள் பல நாட்களாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டும், அதை பகிர்ந்தும் வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close