சென்னை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 11:32 am
goods-train-accident-in-chennai

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற சரக்கு ரயில் ஒன்று கொருக்குபேட்டை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற சரக்கு ரயில் நேற்று விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், கொருக்குப்பேட்டை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.

இந்த விபத்தினால் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வரும் ரயில்கள் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலான அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில்வே ஊழியர்கள் வந்து தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close