குரூப் 1 தேர்வில் 24 வினாக்கள் தவறானவை - ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 01:15 pm
24-questions-wrong-in-tnpsc-group-1-exam-question-paper

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ், காவல்துறை உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு மாதத்திலே அதாவது ஏப்ரல் 3ம் தேதியே வெளியானது. 

இதற்கிடையே, தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 18 முதல் 20 வினாக்கள் தவறானவை என்றும் அந்த வினாக்களை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி நிராகரித்து விட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பார்த்திபன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில்,  தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 24 வினாக்கள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டுள்ளது. தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் - 1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

இறுதியில், இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உரிய விளக்கத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close