ஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு; மறுபக்கம் வீணாகும் குடிநீர்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 09:35 am
cauvery-water-wasted-in-trichy

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு பகுதியில் குடிநீர் வீணாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலைகளில் வறண்டு போன நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் இன்றி, மக்கள் தண்ணீருக்காக கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அப்பகுதி மக்கள் தற்போது காவிரி நீரை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதுவும் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மணப்பாறை நகராட்சி பகுதிக்கு கரூர் மாவட்டம், குளித்தளை அருகில் உள்ள மணத்தட்டையில் இருந்து காவிரி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் மணப்பாறைக்கு கொண்டு வரப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த காவிரி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. அடிக்கடி குழாய் உடைவதால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர்கிடைப்பதில்லை.

இன்று காலை முதல் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி பிரிவு சாலை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி அப்பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது. பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close