தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணை இன்று வெளியாகியுளளது. அதன்படி, 6,491 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 397 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இளநிலை உதவியாளர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு எவ்வளவு காலியிடங்கள் என்ற முழு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு அறிவிப்பு விபரங்கள்:
காலிப்பணியிடங்கள்: 6,491 (வி.ஏ.ஓ - 397)
விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூன் 14, 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 14, 2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 16, 2019
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-
தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 1, 2019 (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை)
வயது வரம்பு: 21 - 40
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு