சென்னை: போதையில் காவலரை தாக்கிய 4 பேர் கைது..

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 01:00 pm
4-men-assaulted-traffic-police

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக உள்ள கார்த்திகேயன் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, மதுபோதையில் இருந்த நான்கு பேர், திருநங்கைகளிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த காவலர், நான்கு பேரையும் எச்சரித்து, அந்த இடத்தை விட்டு நகர சொல்லியிருக்கிறார்.  ஆனால், அந்த நான்கு பேரும் தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும் அதனால் போக முடியாது என்றும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காவலரின் பைக்கில் வைத்து இருந்த லத்தியை எடுத்து அந்த 4 பேரும் காவலரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். உடனே காவலர் வாக்கி டாக்கியில் மற்ற காவலர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அவர் பேசும்போது, வாக்கி டாக்கியையும் அவர்கள் உடைத்துள்ளார்கள்.

பின்னர் சம்பவ இடத்திற்கு மற்ற காவலர்கள் வந்து, அந்த 4 பேரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர். விசாரணையில், அவர்கள் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த  முஹம்மது அக்பர்,  முகமது நவ்ஷத் என தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் நான்கு பேரும் வழக்கறிஞர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாக்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close