5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 01:50 pm
cmc-weather-report

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி,கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

வெப்பத்தின் தாக்கம், வட மற்றும் உள் தமிழக மாவட்டங்களான திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி,  பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 7 செ.மீ மழையும்,திண்டிவனத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் திருவண்ணாமலை, வேலூரில் 4 செ.மீ மழையும், கடலூர் நெய்வேலி மற்றும் ஏற்காடு பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close