மனைவி கழுத்தை பிளேடால் அறுத்துக் கொலை செய்ய முயற்சி; கணவன் கைது!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 04:09 pm
husband-try-to-murder-wife

கும்பகோணத்தில் சாக்கோட்டை, கீழமாத்தியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜகுரு (26), கூலி விவசாயியான இவருக்கும், சுவாமி மலையை அடுத்த ஆணைக்காரன்பட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த மகாலெட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மகாலட்சுமி, மகளிர் குழு மூலமாக ராஜகுருவுக்கு ரூ.25 ஆயிரம் எடுத்துக்கொடுத்துள்ளார். வாரா வாரம் ரூபாய் 670 செலுத்த வேண்டும். இந்நிலையில் பணம் கட்டுவதற்காக மகாலட்சுமி, ராஜகுருவிடம் பணம் கேட்டுள்ளார். சித்தப்பாவிடம் வாங்கித்தருகிறேன் என்று கூறி, கடந்த 12ம் தேதி அசூர் பைபாஸ் அருகே மகாலட்சுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று, தான் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடால், மகாலெட்சுமியின் கழுத்தை இரண்டு முறை அறுத்தார். வலியால் மகாலெட்சுமி சத்தம் போட்டதால், ராஜகுரு அப்படியே விட்டு ஓடி விட்டார்.

வலியால் துடித்து கொண்டே, மகாலெட்சுமி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தார். இதுகுறித்து மகாலெட்சுமி, சுவாமிமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை, ராஜகுருவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close