இந்தி, இங்கிலீஷ்ல தான் பேசணும்.. உத்தரவை திரும்பப் பெற்ற தெற்கு ரயில்வே!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 09:33 pm
hindi-is-to-speak-in-english-southern-railway-has-received-orders-to-return

ரயில்வேயில் பணியாற்றும் அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தான் பேசவேண்டுமென பிறப்பித்த உத்தரவை  தெற்கு ரயில்வே திரும்ப பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர். சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது :

ரயில்வே துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் பேச வேண்டும் என ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே நேற்று பிறப்பித்திருந்தது. இதற்கு, பல்வேறு ரயில்வே சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவு தற்போது திரும்ப  பெறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில்,  ரயில்வே துறையில்  தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று கண்ணையா தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close