தமிழகத்தில் தற்கொலைப்படை: 3 பேர் கைது

  அனிதா   | Last Modified : 15 Jun, 2019 11:12 am
three-person-arrested-for-connection-with-isis-terrorist-organization

கோவையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. 

கோவை மாவட்டத்தில் 7இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 12ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் முகமது உசேன், ஷாஜகான், சேக் சஃபியுல்லா ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை தமிழாக்கம் செய்து பரப்பி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், கோவையில் ஐ.எஸ் அமைப்பின் பலத்தை காட்டுவதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், ஜிகாதிசித்தாந்தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததும்  தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, முகமது உசேன், ஷாஜகான், சேக் சஃபியுல்லா ஆகியோரை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை நீதிபதி, வரும் 28ஆம் தேதி வரை மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close