மத்திய ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 01:48 pm
cm-edappadi-palanisamy-meets-jalsakti-minister

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, சற்றுமுன் ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசி வருகிறார். 

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சிலர், எம்.பிக்கள் மற்றும் சில அதிகாரிகளும் சென்றுள்ளனர்.  

இன்று காலை அவர் பிரதமர் நரேந்திர மாேடியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். தமிழக பிரச்னைகள், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, நீர் வள மேலாண்மை ஆணையத்தில் வைத்து ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசி வருகிறார். 

ஆனால், சற்றுமுன்னதாக தான், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரும், ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து பேசி வருகிறார். 

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் இன்று இரவு சந்திக்க உள்ளார். அனைத்து முக்கிய அமைச்சர்களையும் முதல்வர் சந்திப்பது தமிழக அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close