பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா?

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 03:30 pm
plus-2-subjects-are-reduced-from-6-to-5

பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் உள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வில் சில மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னர் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் உள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதம் ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் பிரிவில் உயிரியியல் பாடத்திற்கு பதில் கணினி அறிவியல் பாடம் இடம்பெறும். 

இதில், மருத்துவம் படிப்பதற்கு தமிழ், ஆங்கிலம் தவிர இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று படங்கள் தேவைப்படும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்கள் தேவைப்படும்.

எனவே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளின் அடிப்படையில் 5 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், உயிரியல் ஆகியவற்றையும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றையும் எடுத்து படிக்கலாம். இதேபோன்று மற்ற பிரிவுகளுக்கும் 6 பாடங்கள் 5 படங்களாக குறைக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்களின் பாடசுமையை குறைக்க முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது. 

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close