வருகிற 21ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம்: பாமக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 06:37 pm
pmk-protest-against-rape-women-harrassment

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெறும் என பா.ம.க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னை தி. நகர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டலத்தின் மாநில துணைச் செயளாலர்கள் மற்றும் மாவட்ட தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வரும் 22ஆம் தேதிக்குள் ஒன்றியத்தின் பொதுக்குழு, மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்ட வேண்டும் என்று தலைமை அறிவித்தப்படி, அந்தந்த மாவட்டத்தில் கூட்டம் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வரும் 21 ஆம் தேதி காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில், பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு தலைமை தாங்கவிருக்கின்றனர். 

இந்த போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணியை சேர்ந்தோரும், பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 23 ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில்,  சட்டப்பாதுகாப்பிற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் கலந்துகொள்வர். 

குறிப்பாக ஒரு ஒரு தொகுதிக்கும், 2000 பேரை தயார் செய்து வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் பணி செய்யவேண்டும் என்ற கட்சியின் கட்டளைக்கு இணங்க அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல்க்கான பணியினை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close