ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 08:56 pm
change-of-rail-transport-southern-railway-announcement

பராமரிப்பு பணி காரணமாக 16, 17-ஆம் தேதிகளில் வண்டலூர் - கூடுவஞ்சேரி இடையேயான ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நாளை 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். நாளை புவனேஸ்வர் விரைவு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு பதிலாக காலை 10.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் - தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து நாளை மதியம் 3 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும். தூத்துக்குடி - எழும்பூர் இணைப்பு ரயில் நாளை தூத்துக்குடியில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close