பிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில் 

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 09:26 pm
requests-to-the-prime-minister-cm

தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்பித்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றபின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்காக பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். மேகதாது அணைக்கு கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன்.முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடி உயர்த்த அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்பட்டது. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு நிதி வழங்கக் கோரியுள்ளேன். 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய - மாநில அரசு கூட்டுத்திட்டமாக செயல்படுத்த கோரிக்கை வைத்தேன்.  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தேன். தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர், மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்’ என்றார்.
 

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடகா தண்ணீர் வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்ற முதல்வர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது யாரோ அவர்களைத்தான் கேட்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close