பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 06:04 pm
engineering-counselling-rank-list-will-be-released-on-june-20

பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடுவதற்கு பதிலாக ஜூன் 20ம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 

நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், ஜூன் 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். 

இதையடுத்து ஜூன் 20-ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் கலந்தாய்வு தேதியும் மாற்றப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கலந்தாய்வு தேதி மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close