போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 12:04 pm
young-man-death-in-police-attack

மதுரையில் வாகன சோதனையின் போது வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞர்களை போலீசார் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் சிம்மக்கல் தைக்கால் தெரு, எம்.ஜி.ஆர் பாலத்தின் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். இதில், விவேகானந்த குமார் (38) என்பவரின் காதில் இருந்து ரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, மயங்கி விழுந்த விவேகானந்த குமார் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

உயிரிழந்த விவேகாந்த குமாருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close