வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 03:47 pm
the-impact-of-heat-in-northern-tamil-nadu-will-increase-to-6-degrees

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 6 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம்  காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வெப்ப நிலையைப் பொருத்தவரை தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம்,வேலுர் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும்,   குறைந்தபட்சம்  31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close