தீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 09:03 am
deepavali-railway-reservation-start-from-23rd-june

தீபாவளி பண்டிகைக்கான இரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. 

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் பயணிகள் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக அக்டோபர் 25ஆம் தேதி தினசரி ரயில்களுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. காலை 8 மணி முதல் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close