பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 01:35 pm
minister-sengottaiyan-press-meet

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு பாடத்திட்டத்தில்  எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு பாடத்திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக மொழிப் பாடத்தில் மாற்றமில்லை. 

தேவைப்பட்டால் தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற நான்கு பாடங்களில் ஆப்ஷன் முறையில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்து கேட்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாட புத்தகங்கள் முழுமையாக சென்றடையாத பள்ளிகளில் இன்று அல்லது நாளை மாலைக்குள் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close