சென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 02:26 pm
water-from-trains-to-chennai

சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

திருவள்ளூரில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு விவசாய கிணறுகள், ஆள்துளை கிணறுகளில் கூடுதலாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில்  விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் கூடுதலாக 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சியிலும் மக்களுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close