எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 04:43 pm
madras-hc-banned-for-south-indian-artists-association-election-to-be-held-in-mgr-college

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

வருகிற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரியில் நடைபெறும் நடிகர் சங்கத்தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு அளித்திருந்தார். அதே நேரத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என்று விஷால் அணிக்கு எதிரணியினரான பாக்யராஜ் அணியினர் நீதிமன்ற விசாரணையின் போது கூறியிருந்தனர். 

இந்நிலையில், இன்று நீதிபதி சுப்பிரமணியம் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், "நடிகர் சங்கத் தேர்தல் என்பதால் திரைத்துறையினர் அனைவரும் வரும்போது அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடும். அப்படி இருக்கையில் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு அது இடையூறாக இருக்கும். எனவே, எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை விதிக்கிறது. 

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு, ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தினால் நன்று. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அல்லது மீனாட்சி கல்லூரிகளில் தேர்தல் நடத்த அனுமதி கேட்கலாம். நடிகர் சங்கத் தேர்தலை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்" என்று விஷால் அணியினருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close