தமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சி: ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 03:27 pm
15th-corporation-of-tamil-nadu-announced-as-the-avadi-corporation

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சியை புதிய மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் 15-ஆவது மாநகராட்சியாக ஆவடி உருவாகிறது. 

10 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ள ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இடம்பெறும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்ளிட்ட 11 கிராம பஞ்சாயத்துகளும் ஆவடி மாநகராட்சிக்குள் வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close