அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 09:25 pm
thermal-winds-in-the-next-2-days-weather-center

அடுத்த 4-5 நாட்களில் வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், மேலும் இந்த பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 4-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்ப நிலையாக 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close