சென்னை: அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு அவகாசம்; எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 09:47 pm
chennai-respite-unauthorized-schools-warning

சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 331 பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரமின்றி 903 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
இந்த நிலையில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், 331 பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்குவதாக அறிவித்தார்.  

இதற்கிடையில், 30 நாள் அவகாசத்திற்குள் அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்று பெறாத பள்ளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், அவ்வாறு அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்று பெறுவதற்கு தவறும், பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close