ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 04:21 pm
moderate-rain-in-one-or-two-places

தமிழகத்தின் மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் அனல் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர்,  காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். அதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 3 செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 1செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close