ராகுலுக்காக தங்கத்தேர் இழுத்த முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 04:58 pm
puducherry-cm-narayanasamy-pray-for-rahul-gandhi

ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு ராகுல் இனிப்பு வழங்கினார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதையடுத்து, ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் தங்கத்தேர் இழுத்து, வழிபாடு நடத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close