முழு பூசணியை சோற்றில் மறைப்பதா? : அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 08:00 pm
water-crisis-stalin-asks-question-to-tn-government

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்படலாமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையின்மையால், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால்,  மாநிலத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாதது போலவும், எதிர்க்கட்சிகள் வீணாக வதந்தி பரப்பி வருவதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது.

இதன் மூலம், தமிழக அரசும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனர். எனவே, தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்துக்கு போகும்படி, திமுக மாவட்ட செயலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close