பஸ் டே : கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட்!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 08:22 pm
bus-day-9-students-suspended-from-college

பஸ் டே கொண்டாடிய மாணவர்களில் 9 பேரை சஸ்பெண்ட் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கீழ்ப்பாக்கம் பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சில தினங்களுக்கு முன் பஸ் -டே கொண்டாடினர். அப்போது அவர்கள், மாநகர் பேருந்தின் மேற்கூரையில் கும்பலாக ஏறி கொண்டிருக்க, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, சீட்டுக்கட்டு சரிவதை போன்று, பஸ்சின் மேற்கூரையிலிருந்து கொத்தாக மாணவர்கள் சாலையில் சரிந்து விழுந்தனர்.  இக்காட்சி கண்போரின் நெஞ்சை பதற வைத்தது.

இதையடுத்து, தடை மீறி பஸ் டே கொண்டாடியதாக, 9 மாணவர்கள் மீது கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் எதிரொலியாக, அந்த ஒன்பது மாணவர்களையும் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாணவர்கள், கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி கல்லூரி வளாகத்துக்குள் நுழையக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close