மனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 08:48 am
yoga-is-good-for-humanity-minister

மனித குலத்திற்கே யோகா நல்லது என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனித குலத்திற்கே யோகா நல்லது என்றும், அனைத்து விதத்திலும் நமது பாரம்பரியத்தை நமக்கே அறிமுகப்படுதுவதாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழர் பண்பாட்டில் யோகாவை கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னேறிய 2 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது என்றும், தமிழக அரசு மருத்துவத்துறைக்கு முக்கியத்தும் அளித்துள்ளது எனவும் கூறினார். குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவே தமிழகத்தின் முக்கிய சாதனை என பெருமிதம் தெரிவித்தார்.  

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close