மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 11:32 am
subsidized-scooter-for-women-application-from-today

சென்னையில் பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் வாங்குவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 - 19ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனத்திற்கு விருப்பமுள்ள சென்னையில் பணிபுரியும் பெண்கள் இன்று முதல் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகவோ தங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். வாகனத்தின் விலையில் 50 % அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். 

மாற்றுத்திறனாளிகள் Retro fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும் என்றும், 125CC க்கு மிகாமல் மோட்டார் வாக சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கூடிய வாகனத்தை வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close