2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசிய கீதத்தில் பிழை! - கொந்தளித்த ஆசிரியர்கள்..

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 02:19 pm
spelling-mistake-in-desiya-geetham

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தேசிய கீதத்தில் ஏற்பட்டுள்ள பிழையை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு மீதியுள்ள 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நல்ல தரத்துடன், சமீபத்திய அப்டேட்டுடன் புத்தகங்கள் மாணவர்களை கவர்வதாக உள்ளது.

இதில், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதம் பாடல் வரிகள் தவறாக அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் வகுப்புக்கான, முதல் பருவ கணக்கு மற்றும் சூழலியல் பாடத்துக்கான புத்தகத்தில் தேசிய கீதமும் தமிழில் அதன் பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. இதில், 10வது வரி "ஜன கண மங்கள தாயக ஜய ஹே..' என்பதற்கு பதிலாக "ஜன கண மன அதிநாயக ஜய ஹே..' என்று வரிகளில் பிழை ஏற்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close