தமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 04:15 pm
yoga-day-should-be-celebrated-in-all-schools-colleges-in-tn

ஜூன் 21ம் தேதி யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதன் அடிப்படையில், இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த முறை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நாட்டின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு அம்சமாக கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று ஐ.நா. சபை ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

அதன்படி  2015-ம் ஆண்டு முதல் 'சர்வதேச யோகா தினம்' பல்வேறு நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அங்கு வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்கும் யோகாவை பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறுவார்.

பிரதமர் மோடி யோகா செய்வது போல அனிமேஷன் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. யோகாவின் முக்கியத்துவத்தை பல்வேறு கோணங்களில் மக்களுக்கு உணர்த்தி வரும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு, 5-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு முதல் பொது விழாவில் பங்கேற்க உள்ளார். 

இந்நிலையில், நாட்டில் அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் இளவயதினரே அதிகமாக உள்ள காரணத்தினால் யோகா தினத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கொண்டாட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு/தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, அரசு/தனியார் பள்ளிகளுக்கு யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுற்றறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு யோகா தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close