அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்! - இந்திய வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 04:56 pm
rainfall-will-be-happened-for-next-2-days-imd

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மட்டுமின்றி  கர்நாடகா, ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் முக்கியமாக  சென்னைவாசிகளிடையே அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close