பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 07:52 pm
important-notice-to-passengers-the-tour-buses-passing-through-the-longer-ashok-pillar

கோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரயில் பணிக்காக மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் இன்று அறிவித்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்கேற்ப வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் செல்லும் என்றும், காலை 10 முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் மாநகர் சாலை வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளது.

மேலும், வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவும் செய்து கொள்ளலாம் என்றும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close