மானிய ஸ்கூட்டருக்கு அலைமாேதும் பெண்கள் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 09:53 am
special-discount-for-ladies-under-amma-scooter-scheme


சென்னையில் ‛அம்மா’ இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானிய விலையில் வாகனம் வாங்க பெண்கள் பலரும் விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர். 

தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 - 19ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனத்திற்கு விருப்பமுள்ள சென்னையில் பணிபுரியும் பெண்கள்  ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நேற்று முதல் ஏராளமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பித்து வருகின்றனர். 

விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகவோ தங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் விலையில் 50 % அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். 

மாற்றுத்திறனாளிகள் Retro fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும் என்றும், 125CC க்கு மிகாமல் மோட்டார் வாக சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கூடிய வாகனத்தை வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிப்பதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதால், மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலை மாேதுகிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close