தண்ணீர் தட்டுப்பாடு: முதல்வர் தலைமையில் தீவிர ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 12:15 pm
water-scarcity-cm-discussed-with-secretary-and-ministers

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருவதையடுத்து, அது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அதிகாரிகள், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் கோடை காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அவல நிலை இருந்து வருகிறது. மக்கள் குடிநீருக்காக ஆங்காங்கே குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலையை காண முடிகிறது. 

இதையடுத்து தமிழக அரசு, லாரிகளின் மூலமாக மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. இருந்தும் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து இன்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close